யாத்ரா

யாத்ரா

Paperback (20 Nov 2023) | Tamil

  • $21.48
Add to basket

Includes delivery to the United States

10+ copies available online - Usually dispatched within 7 days

Publisher's Synopsis

டீசர்

சற்று நேரத்தில் அவர்களின் வண்டி ஒரு குடோனில் வந்து நின்றது... கண்ணாடியூடு பார்த்தாள்...

"இது என்ன இடம்?" என்று அவள் யோசிக்க, "இறங்கு" என்று சொல்லிக் கொண்டே யாத்ரா இறங்க, அவளும் இறங்கினாள்...

அவனோ நடந்து கொண்டே, "முன்ன பின்ன போட்டு பார்த்து இருக்கியா?" என்று கேட்டான்...

'முன்ன பின்ன போடுறதா? எதன்னு தெரியலையே, ட்ரெஸ்ஸா இருக்குமோ? நான் ட்ரெஸ் போட்டு தானே இருக்கேன்... ஏதாவது படமா இருக்குமோ?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அவள் நடக்க, "கேக்கிறேன் ல" என்றான் அவன் அதட்டலாக அவளை பார்க்காமல் நடந்து கொண்டே...

"எந்த படம்னு சொன்னீங்கன்னா, போட்டு பார்த்து இருக்கேனா? இல்லையான்னு சொல்லிடுவேன்" என்றாள்...

சட்டென நின்று விட்டான்...

பின்னால் திரும்பி அவளை அழுத்தமாக பார்க்க, 'இப்போ என்ன கேட்டுட்டேன்னு முறைக்கிறான்? பதில் சொல்லலைன்னு கடுப்பாயிட்டானோ' என்று நினைத்தவள், "பழைய படம் போட்டு பார்த்தது இல்ல... புது படம் எல்லாமே லேப்டாப் ல போட்டு பார்த்து இருக்கேன்" என்றாள்...

அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்தவனோ, "இன்னைக்கு போட்டு காட்டுறேன்" என்று சொல்லிக் கொண்டே நடக்க, "பழைய படமா? புது படமா?" என்று கேட்டாள்...

"கில்லர் மூவி" என்றான்...

"அப்போ இது தியேட்டர் ஆஹ்?" என்று கேட்க, "இல்ல லைவ்" என்றான்...

'ஷூட்டிங் நடக்குற இடம் போல' என்று நினைத்தவளோ, "யாரு ஹீரோ?" என்று கேட்டாள்...

அவனுக்கோ அவள் பேச பேச கடுப்பாகி விட்டது...

அவளை திரும்பி முறைத்துப் பார்த்தவன், "நான் தான் டி" என்றான்...

"நீங்க நடிப்பீங்களா?" என்றாள் ஆச்சரியமாக...

அவனோ நெற்றியை நீவிக் கொள்ள, அவன் அருகே நடந்து வந்த அவனது செக்ரீட்டரி முருகனுக்கு சிரிப்பு...



Book information

ISBN: 9798869010568
Publisher: Magadheera Publications
Imprint: Magadheera Publications
Pub date:
Language: Tamil
Number of pages: 402
Weight: 395g
Height: 203mm
Width: 127mm
Spine width: 21mm